கோவை பொள்ளாச்சியில், நகை வாங்குவது போல நகைக்கடைக்கு வந்த நபர் ஒருவர், ஊழியர் திரும்பிய நேரம் பார்த்து நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
வாடிக்கையாளர் போன்று வந்த நபரிடம் ஊழியர் நகை டிசைன்களை காண்பித்துக் கொண்டிருந்த நிலையில், நகையை வைப்பதற்காக ஊழியர் திரும்பிய சமயத்தில், அந்த நபர் மேஜையில் இருந்த சில நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடினார்.
கடை ஊழியரும் பொதுமக்களும் விரட்டிச் சென்ற போது தவறி கீழே விழுந்த அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது.