நாங்க ஒன்னு சேர்ந்துட்டோம்.. ஜோ பைடன் முடிவால் சீனா செம ஹேப்பி..!

அமெரிக்க – சீனா மத்தியிலான வர்த்தகப் போர் மற்றும் தடைகள் டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் மிகவும் மோசமாக இருந்த நிலையில், ஜோ பைடன் ஆட்சியில் புதிய தடைகளும், கட்டுப்பாடுகளும் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் அமரிக்கா ரஷ்யா மீதான தடையில் அதிகப்படியான பாதிப்புகளைச் சப்ளை செயின் பிரிவில் எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா சீனா மீது விதித்த சில தடைகளையும், வரி விதிப்புகளையும் நீக்க உள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தளர்வுகள் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி யாரையும் நம்ப தேவையில்லை.. இந்தியா-ரஷ்யா டீம்.. விளாடிமிர் புதின் தரமான திட்டம்..!

 ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.

அமெரிக்கா-வை போல் சீனாவும் அமெரிக்காவில் இருந்து தன்னாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்து குறிப்பிடத்தக்கது.

 சீன பொருட்கள்

சீன பொருட்கள்

ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றிய காலத்தில் இருந்து சீன பொருட்கள் மீதான வரி விதிப்புகளைத் தளர்த்த முயற்சி செய்து வந்த நிலையில், இரு நாடுகள் மத்தியிலான கொள்கை முடிவுகளில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் மத்தியில் மாற்றுப்பட்ட கருது நிலவியது.

ரெசிஷன்
 

ரெசிஷன்

இந்நிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷன் நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் வேளையில் அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் மற்றும் வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமண்டோ ஆகியோர் வரி குறைக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் மற்றும் வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமண்டோ வரியை குறைக்க ஆதரவு தெரிவிக்கும் இதேவேளையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாய் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் சீனா வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த வரியை குறைக்கக் கூடாது எனக் கூறிவருகின்றனர்.

ஜோ பைடன் முடிவு

ஜோ பைடன் முடிவு

இதற்கிடையில் ஜோ பைடன் சீனா பொருட்கள் மீதான வரியை குறைக்கப்பட்டால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும். இதனால் பணவீக்கத்தைக் குறைக்க வழி உருவாகும் எனப் பைடன் நம்புவதால் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Joe Biden could lift some tax imposed on Chinese goods under Trump Administration

Joe Biden could lift some tax imposed on Chinese goods under Trump Administration நாங்க ஒன்னு சேர்ந்துட்டோம்.. ஜோ பைடன் முடிவால் சீனா செம ஹேப்பி..!

Story first published: Wednesday, July 6, 2022, 16:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.