பெங்களூரு :நில அதிர்வு ஏற்படும் பகுதிகளில் ஆய்வு செய்ய, ஹைதராபாத்தில் இருந்து விஞ்ஞானிகள் வரவுள்ளனர்.கர்நாடகாவின் குடகு, ஹாசன், துமகூரு, சிக்கபல்லாபூர், தட்சிண கன்னடா உட்பட சில பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதால் அப்பகுதியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.குறிப்பாக மலை பிரதேசமான குடகின் பல பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். தற்போது, தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்துள்ளதால், எப்போது என்ன நடக்கும் என்று பீதியில் உள்ளனர். இந்நிலையில், நில அதிர்வுக்கான காரணத்தை கண்டுபிடிக்க, தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இருந்து விஞ்ஞானிகள் விரைவில் கர்நாடகா வரவுள்ளனர். ஒரு வாரம் தங்கி, நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, தடுப்பது எப்படி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மாநில அரசு அதிகாரிகளுடன் தகவல்கள் பரிமாறி கொள்வர்.
Advertisement