திருவள்ளூர் அருகே நள்ளிரவில் பாஜக நிர்வாகியின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவரான தியாகராஜன் நரசிங்கபுரத்தில் வசித்து வருகிறார்.
இவர் வழக்கம் போல நேற்றிரவு வீட்டுக்கு அருகில் வெளியே காரை நிறுத்தி வைத்த நிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் கார் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
தியாகராஜன் வந்து பார்த்த போது காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. புகாரின் பேரில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் தொழில் போட்டி காரணமாக கார் எறிக்கப்பட்டதா அல்லது காரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்