லிஸ்பன்:பீர் குடித்தால் நீரிழிவு, இதய நோய்கள் வராது என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த சுகாதார ஆராய்ச்சி மையம், 23 – 58 வயதுக்கு உட்பட்ட சிலரிடம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. தொடர்ந்து நான்கு வாரங்கள் அவர்களுக்கு 330 மி.லி., பீர் வழங்கப்பட்டது. நான்கு வாரத்துக்குப் பின், அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், நுண்ணுயிரி செயல்பாடு அதிகரித்து இருந்தது.
இது, நீரிழிவு மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது. ஆனால், ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால் தான் நுண்ணுயிரி செயல்பாடு அதிகரிக்கும். மேலும், பீர் குடித்தால் உடலில் கொழுப்பு சேராது; உடல் எடையும் கூடாது. அதே நேரத்தில், குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மையும் அதிகரிக்கும் என அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.அதே நேரத்தில் ஆல்கஹால் கலந்த பீர் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லிஸ்பன்:பீர் குடித்தால் நீரிழிவு, இதய நோய்கள் வராது என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த சுகாதார ஆராய்ச்சி மையம், 23 – 58 வயதுக்கு உட்பட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.