புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கோவை டாப்பு.. நாக்ரி-ன் கலக்கல் ரிப்போர்ட்..!

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் ஜூன் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேலைசேர்ப்பு (Hiring) அளவு 22 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு தேடல் தளமான நாக்ரி.காம் தெரிவித்துள்ளது.

நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் ஜூன் மாதம் 2878 புள்ளிகளைத் தொட்டது, கடந்த பிப்ரவரி மாதம் தான் இதன் அளவீடு 3000 புள்ளிகளாக உயர்ந்து உச்சத்தைத் தொட்டது, இதன் பின்பு ஜூன் மாதம் 2வது உச்சத்தைத் தொட்டு உள்ளது.

இனி கடன் வாங்கவே கூடாதுன்னு நினைக்கிறீங்களா.. அப்படின்னா 3 விஷயங்களை மறக்காம செய்யுங்க!

தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக நாக்ரி.காம் கூறியுள்ளது.

நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ்

நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ்

நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் தரவுகள் படி ஜூன் மாதம் மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் அதிகப்படியான வேலைசேர்ப்பு (Hiring) அளவு பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மெட்ரோ நகரங்கள்

மெட்ரோ நகரங்கள்

மெட்ரோ நகரங்களில் வழக்கம் போல் மும்பை வேலைசேர்ப்பு (Hiring) அளவில் 43 சதவீத வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மும்பையைத் தொடர்ந்து கொல்கத்தா (+29%), டெல்லி (+29%), சென்னை (+21%), பெங்களூர் (+17%), புனே (+15%), மற்றும் ஹைதராபாத் (+11%) ஆகியவை அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது.

கோயமுத்தூர் டாப்பு
 

கோயமுத்தூர் டாப்பு

இதேபோல் மெட்ரோ அல்லாத நகரங்களில் கோயமுத்தூர் கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் வேலைசேர்ப்பு (Hiring) அளவில் 60 சதவீத வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கொச்சி 51 சதவீத வளர்ச்சியும், ஜெய்ப்பூர் 19 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. அகமதாபாத் மற்றும் சண்டிகர் ஆகியவை மட்டுமே மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

துறை சார்ந்த வளர்ச்சி

துறை சார்ந்த வளர்ச்சி

மேலும் துறைவாரியாகப் பார்க்கும் போது டிராவில் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையில் Hiring அளவு 125% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து ரீடைல் (+75%), BFSI (+58%), இன்சூரன்ஸ் (+48%), கல்வி (+47%), ரியல் எஸ்டேட் (+46%), ஆட்டோ (+37%) மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு (+36 %) வளர்ச்சி அடைந்துள்ளது. பார்மா/பயோடெக் மற்றும் டெலிகாம் மட்டும் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பிரஷ்ஷர்ஸ் வேலைவாய்ப்பு

பிரஷ்ஷர்ஸ் வேலைவாய்ப்பு

அனைத்திலும் முக்கியமான பிரஷ்ஷர்ஸ் பணியில் சேர்க்கும் அளவீட்டில் மெட்ரோ பிரிவில் மும்பை-யில் 93 சதவீதமும், மெட்ரோ அல்லாத பிரிவில் கொச்சி – யில் 105 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே பிரஷ்ஷர்ஸ் பணியில் சேர்ப்பு விகிதம் 30 சதவீத வருடந்திர வளர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian companies hiring YOY grows to 22 percent in June, Coimbatore tops in Non Metro

Indian companies hiring YOY grows to 22 percent in June, Coimbatore tops in Non Metro புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கோவை டாப்பு.. நாக்ரி-ன் கலக்கல் ரிப்போர்ட்..!

Story first published: Wednesday, July 6, 2022, 17:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.