புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்ணுக்கு லொட்டரில் விழுந்த அதிர்ஷ்டம்!


அமெரிக்காவில் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்ணுக்கு மேலும் அதிர்ஷ்டமாக லொட்டரியில் 1 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஃபிரடெரிக் நகரத்தைச் சேந்த அப்பெண் தனது புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் இப்போது குணமடைந்துள்ளார்.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் அவரும் அவரது 57 வயது கணவரும் மிகவும் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளனர்.

அவரது சிகிச்சையின் போது, ​​மற்றும் சமீபத்திய வாரங்கள் மற்றும் மாதங்களில், இருவரும் கவனச்சிதறலாகவும் கவலையிலிருந்து மீளவும் கீறல் லொட்டரிச் சீட்டுகளை வாங்கி விளையாடி வந்தனர்.

கனவில் கண்ட எண்கள்., லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற நபர்! 

புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்ணுக்கு லொட்டரில் விழுந்த அதிர்ஷ்டம்! | Cancer Survivor Won Million Jackpot Lottery Prize

அப்படி, வாங்கிய $20 Show Me $1,000,000! எனும் ஸ்கிராட்ச்-ஆஃப் லொட்டரி சீட்டில் தான் ஜூன் 28-ஆம் திகதி 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு விழுந்துள்ளது.

புற்றுநோர் குணமடைந்த நிலையில் இருவரும் விடுமுறைக்கு திட்டமிட்டிருந்தனர் , ஆனால் கொண்டாட்டங்கள் பெரிதாக திட்டமிடப்படவில்லை. ஆனால், விடுமுறையயை சிறப்பாக கொண்டாட இப்போது கையில் கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது.

தினமும் உயிருடன் இருப்பதற்காகவும், எதோ ஒரு வேலை இருப்பதற்காகவும் ஒவ்வொருநாளும் ஒரு சிறிய கொண்டாட்டம் போலவே இருக்கும் எனறு கூறிய அந்த வயதான தம்பதிக்கு இப்போது ஜாக்போட் அடித்துள்ளது.

2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்! 

புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்ணுக்கு லொட்டரில் விழுந்த அதிர்ஷ்டம்! | Cancer Survivor Won Million Jackpot Lottery Prize

அவர்கள் இந்த பரிசுத்தொகையை செவ்வாய்கிழமை பெற்றுக்கொண்டனர்.

இந்த பணம் மனைவிக்கு முன்கூட்டியே ஓய்வு பெறவும், சில கடன்களை செட்டில் செய்யவும் உதவியாக இருக்கும் என்று கூறிய தம்பதி, மீதமுள்ள பெரும்பாலான பணத்தை சேமிப்பில் வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்ணுக்கு லொட்டரில் விழுந்த அதிர்ஷ்டம்! | Cancer Survivor Won Million Jackpot Lottery Prize

இந்திய இளம்பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! சுவாரசிய தகவல் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.