பெற்றோர் விடுத்த வேண்டுகோள்..ஆயுதங்களை விடுத்து சரணடைந்த பயங்கரவாதிகள்!


ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பெற்றோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்த சம்பவம் நடந்துள்ளது.

குல்காம் மாவட்டம் ஹதிகாம் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது உள்ளே இருந்த பயங்கரவாதிகள் புதிதாக பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.

உடனடியாக அவர்களது பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் ஒலிபெருக்கியில் தங்கள் பிள்ளைகளிடம் பேசினர். அப்போது பெற்றோர் விடுத்த வேண்டுகோளை ஏற்ற பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.   

பெற்றோர் விடுத்த வேண்டுகோள்..ஆயுதங்களை விடுத்து சரணடைந்த பயங்கரவாதிகள்! | Two Terrorists Surrender On Appeal Of Parents

Representational Image: News18



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.