இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் தேசிய மாநாடு, மத்திய அமைச்சா் பியூஸ் கோயல், மத்திய இணைஅமைச்சா்கள் அஸ்வினி குமாா் சௌபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி தலைமையில் நடைபெற்றது.
உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது, உணவு உற்பத்தி பல்வகைப்படுத்தல், பயிா் பல்வகைப்படுத்தல், ஒருங்கிணைந்த அன்னவித்ரான் தளம் 2.0, மற்றும் உணவுக் கிடங்குகளை சீா்திருத்துவது தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் ஏழ்மை நிலை குறைந்திருக்கிறது. மாநாட்டில் பேசிய தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் பொது விநியோக திட்டம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 98% அங்காடி பரிவர்த்தனைகள் கைரேகைப் பதிவு மூலம் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அமைச்ச்சர் சக்கரபாணி நிதி ஆயோக் அறிக்கையின்படி, தமிழகத்தில் 4.98% மக்கள் மட்டுமே ஏழ்மை நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறியதாவது ; உணவுத்துறைக்கான ரூ.2,000 கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும் .அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆட்சியை பிடித்த திமுக தேர்தல் அறிக்கையில் பேரூராட்சி பகுதிகளில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“