புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நபர் உட்பட, அமைச்சரவை அமைச்சர்கள் குழு பிரதமர் போரிஸ் ஜான்சனை பதவி விலகச் சொன்னதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நதிம் ஜஹாவி உட்பட, கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள் குழு ஒன்று கூடி பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம், அவர் விலக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தங்கள் பதவியை செவ்வாய்கிழமை மாலை ராஜினாமா செய்ததிலிருந்து, போரிஸ் ஜான்சன் அதிகாரத்தின் பிடி நழுவி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஜூனியர் அமைச்சர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 39 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் உட்பட மற்ற மூத்த அமைச்சரவை அமைச்சர்கள் இன்னும் பகிரங்கமாக ஜான்சனை ஆதரிக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி: போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தில் இருந்து 27 எம்.பி.க்கள் ராஜினாமா!
அறிக்கைகள் பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் இதுவரை நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. பெரும்பான்மையினர் அவரை பதவி விலக வலியுறுத்தியும், அவர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.