போதைப் பொருள் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து குஜராத்தின் போர்பந்தர் மற்றும் துவாரகா அடுத்த கடல்பகுதியில் கடலோரக் காவல் படையினர் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர்.
ஆபரேசன் ஐலண்ட் வாட்ச் என்ற பெயரில் அருகில் உள்ள ஆளில்லாத 70 குட்டித் தீவுகளைக் கண்காணிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அத்தீவுகளில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேச விரோத சக்திகள் சதி வேலைகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ள போதும் திடீரென அதிரடி சோதனைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
கடலோரக் காவல்படைக் கப்பல்கள், ஹெலிகாப்டர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.