பெங்களூரு : ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை கர்நாடக அரசு, ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது.எஸ்.ஐ., தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யான மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி அம்ரித் பால் நேற்று முன்தினம் சி.ஐ.டி., போலீசா ரால் கைது செய்யப்பட்டார்.
பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 13ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.இதுபோன்று, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டராக இருந்த போது, நிலத்தகராறில் சாதகமாக தீர்ப்பு வழங்க, 5 லட்சம் ரூபாய் வாங்கியதாக மக்கள் உரிமை பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனரான ஐ.ஏ. எஸ்., அதிகாரி மஞ்சுநாத், ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டது, கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குடியுரிமை பணி அதிகாரிகள் கைது செய்யப்பட்டால், அவர்கள் உடனடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, இரண்டு அதிகாரிகளையும், ‘சஸ்பெண்ட்’ செய்து, கர்நாடக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
Advertisement