கல்லூரி மேம்பாட்டுக்கு கடன் பெற்று தருவதாக கூறி கல்லூரி தாளாளரிடம் இருந்து 6 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், போலி பைனான்சியர் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் தாளாளர் முகமது ஜலீல், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து, 200 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி அதற்கு 2 சதவீதம் கமிஷனாக 5 கோடியே 46 லட்சம் ரூபாயையும் பெற்றுக் கொண்டார்.
ஆனால் கூறியபடி கடன் ஏற்பாடு செய்து தரவில்லை என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.