வலி நிவாரணி மருந்தாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு வகை மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்த நபரொருவர் நேற்று முன்தினம் (04) கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புட்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து Pregazime 150mg வகையிலான 530 வலி நிவாரண மாத்திரைகள், Pregabalin 150mg வகையிலான 190 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் Novapreg 150mg வகையிலான 880 வலி நிவாரண மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மருந்துகளின் மொத்த பெறுமதி மூன்று லட்சம் ரூபாய்களுக்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.