தமிழக மாவட்டம் வேலூரில் தனது காதலியை கத்தியால் குத்திய இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் நடுத்தெருவுவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரும் அதே தெருவில் வசிக்கும் 18 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தங்கள் வீட்டாருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவரவர் வீட்டில் தனி தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருவலம் பேருந்தில் கல்லூரிக்கு செல்ல குறித்த மாணவி காத்திருந்தபோது, சதீஷ்குமார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்த தப்ப முயன்ற சதீஷ்குமாரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சதீஷ்குமாரை கைது செய்து அவரிடம் விசாரித்தபோது, குறித்த மாணவி தன்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசுவது குறித்து கேட்டதால் வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.