வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

LPG Price Hike Update : வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணையம் செய்யப்பட்டு வருகிறது. இதன அடிப்படியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது.

இதில் ரூ965-ல் இருந்த சிலிண்டர் விலை கடந்த மே மாதம் 7-ந் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 1015-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து மே மாதம் 19-ந் தேதி ரூ 3.50 உயர்த்தப்பட்டு ரூ1018.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் நடுத்தர வர்க்க மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

இந்நிலையில், அவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 50 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது. அதன்படி டெல்லியில் இன்று சிலிண்டர் விலை ₹1053 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில், ரூ.1002.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.1,052.50 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், கொல்கத்தாவில் 14 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ1,029-ல் இருந்து ரூ1,079 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ1,058.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை தற்போது ரூ1068.50 ஆக உயர்ந்துள்ளது. ஒஎம்சி (OMC) களும் 5 கிலோ வீட்டு சிலிண்டர் விலை ரூ18 அதிகரித்துள்ளது. அதே சமயம் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ8.50 குறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.