வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த யாஷினி என்பவரை காதலித்து வந்தார். யாஷினி வேறு யாருடனோ தொடர்பில் இருப்பதாக சந்தேகம் அடைந்த சதீஷ்குமார் யாஷினியை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த யாஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.