நாளுக்கு நாள் வளர்ச்சிப்பாதையில் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சினிமா ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பல கலைஞர்களின் வலி மற்றும் வேதனை நிறைந்த வாழ்க்கையும் இருக்கதான் செய்கிறது. இந்த வாக்கியத்திற்கு முக்கிய உதாரணமாக திரையுலகினர் மட்டுமல்லாமல் பலரையும் கண்ணீர் கடலில் சிக்க வைத்தவர்தான் பாபு.
இவரை என் உயிர் தோழன் பாபு என்றால் அனைவருக்கும் தெரியும். கடந்த 1990-ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் என் உயிர் தோழன். தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபுவை நாயகனாக்கி பாரதி ராஜா இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றி காண்பித்தார். அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற தொண்டனாக முதல் படத்திலேயே முத்தி பதித்தார் பாபு.
அன்றில் இருந்து என் உயிர் தோழன் பாபு என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகான அறியப்பட்ட பாபு, தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் நாயகான நடித்திருந்தார். 4 படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு 5-வது படத்தின் தனது திரை வாழ்க்கையே தொலைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனசார வாழ்த்துக்களேன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு தயாராக படப்பிடிப்பு குழுவினர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறி டூப் நடிகரை தயார்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் பாபு தானே இதை செய்கிறேன் என்று கூறி குதிப்பதற்கு தயாராகியுள்ளார். இதற்காக ஏற்பாடுகள் நடந்து முடிந்து பாபு மேலே இருந்து குதித்துள்ளார். ஆனால் டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நெறுங்கியது. அப்போதே பாபுவின் சினிமா கனவும் சுக்குநூறாக போய்விட்டது.
அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 20 வருடங்காளாக படுத்த படுக்கையாக தற்போது வரை மருத்துவமயைில் இருந்து வருகிறார். தற்போதுவரை திரையுலம் இவரை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. அவரின் குருவான இயக்குநர் இமயம் பாரதிராஜா பாவுவை சமீபத்தில் மருத்துவமனையில் நேரில் சந்தித்துள்ளார். அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து கிடக்கும் பாபுவை பார்த்த பாரதிராஜா கண்கலங்கியது வைரலாக பரவியது.
திரைத்துரையில் முதலில் சில படங்களில் ஹிட் கொடுத்துவிட்டால் அடுத்து வித்தியாசமான படங்கள் மற்றும் வித்தியாசமாக முயற்சிகளில இறங்கி தங்களது திரை வாழ்க்கையை மேலோ கொண்டு செல்ல முயற்சிப்பது பொதுவாக அனைவரிடமும் காணப்படும் ஒரு செயல். திரைத்துரைக்கு மட்டுமல்ல மற்ற எல்லா பணிகளுக்கும் இது பொருந்தும்.
ஆனால் இந்த மாதிரி தனது வாழ்க்கையை தொடங்கிய என் உயிர் தோழன் பாபுவின் வாழ்க்கை ஆரம்பிக்கும்போதே முடிந்துபோனது பலரையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“