குடி குடியை கெடுக்கும் என்று என்னதான் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தாலும், உலக அளவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதுவும் பீர் குடிப்பதென்பது ஏதோ குளிர்பானம் குடிப்பது போன்று மதுபிரியர்கள் மத்தியில் சர்வசாதாரண விஷயமாகிவிட்டது.
ஹாட் வகை மதுபானங்கள் எனப்படும் ரம், விஸ்கி உள்ளிட்டவற்றை போன்றே பீரிலும் ஆல்கஹால் கலந்துள்ளதால் இதுவும் உடல் நலத்துக்கு கேடுதான் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்து கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் பார்களில் தினமும் பீர் விற்பனை கனஜோராக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், பீர் குடித்தால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வராது என்று ஒரு ஆய்வு வியக்கத்தக்க தகவலை தெரிவித்துள்ளது. இதை கேட்ட உடனே பீர் பிரியர்களுக்கு சந்தோஷமாக தான் இருக்கும். ஆனால் அந்த ஆய்வு முடிவில் ஒரு முக்கியமான கண்டிஷனும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது ஆல்கஹால் கலக்கப்படாத பீரை பருகினால் மட்டுமே இதய மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கப்படுமாம்.
new type of corona in india…இஸ்ரேல் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
போர்ச்சுக்கல் நாட்டின் போர்ட்டோ நகரில் உள்ள சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் அண்மையில் இந்த ஆய்வை மேற்கொண்டது. 23 -58 வயதுக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களை ஆல்கஹால் கலக்காத பீர் 330 மிலி தொடர்ந்து ஒரு மாதம் குடிக்க வைத்தனர்.
அதில் அவர்களுக்கு சர்க்கரை நோய்,, இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு மேம்பட்டது தெரிய வந்தது.
ஒரு கட்டு கறிவேப்பிலை -ரூ.80, துடைப்பம் -ரூ.473… எங்கேன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
ஆல்கஹால் அல்லாத பீரை குடித்தால் தான் இதுபோன்ற செயல்பாடுகள் உடலில் நிகழ்வதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பீர் அருந்துவதால் உடலில் கொழுப்பு, உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.