Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு எதிராக சசிகலா காட்டம்
பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர் என வி.கே. சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் 2,662 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் செவ்வாய் கிழமை, மேலும் 2,662 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 16,765 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மேலும் 1,060 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 6,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்தார்.
மின்வாரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து!
அரசு பணி ஆட்சேர்ப்பு பணிகளை டி.என்.பி.எஸ்.சி. மட்டுமே மேற்கொள்ளும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 5,318 காலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்தானது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு!
தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,068.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. அதே நேரம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 8.50 குறைந்து, ரூ.2,177.50 ஆக விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை, பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது. மாவட்டத்திற்கு 6 நிர்வாகிகள் பங்கேற்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
கனமழை காரணமாக, உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில், 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் தாளுக்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.