பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதங்களை அந்நாட்டு மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் உணவு, மருந்து, எரிபொருட்களை வாங்க முடியாமல் இலங்கை அரசு கடும் நெருக்கடிக்குள் உள்ளாகி இருக்கிறது.
நிலையான கடன் வசதி விகிதத்தை 15.50 சதவீதமாகவும், நிலையான வைப்பு வசதி விகிதத்தை 14.50 சதவீதமாகவும் இலங்கை மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.