சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 41.06 லட்சம் பணம், 963 சவரன் நகை சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல். காலை 5.30 மணியில் இருந்து நடைபெற்ற சோதனையில் 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐபோன் உள்ளிட்டவைகளும் சிக்கின. ரூ. 15.5 லட்சம் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கிப் பெட்டக சாவி, பென்டிரைவ் உள்ளிட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.