‘அவளை மறக்கத்தான்.. என்னை மறக்கத்தான்’ – அதிரடியாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ டீசர்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம் எனப் பலரும் நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த வாரம் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் தோன்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது. த்ரிஷா உட்பட மேலும் சிலரின் போஸ்டரும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டை தஞ்சை பெரிய கோவிலில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

image

இந்தப் படத்தின் டீசரை (08.07.2022) இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் டீசர் வெளியீட்டிற்கான நிகழ்வை நடத்தப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் இன்று டீசர் வெளியாகியுள்ளது.

ஏ. ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன் சோழப்பேரரசின் போர்க்கள கதைக்களத்துடன் அருமையாக ஆரம்பிக்கிறது. ‘கல்லும், பாட்டும், ரத்தமும் போர்க்களமும் எல்லாத்தையும் மறக்கத்தான். அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்’ என்று விக்ரமின் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.