அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் தாயார் விஜயம்மா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கௌரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். குண்டூர் அருகே நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநாட்டில் விஜயம்மாவின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. மகள் ஷர்மிளா தொடங்கிய தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே ராஜினாமா முடிவு என அவர் தெரிவித்தார்.