ஆற்றில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் பலி| Dinamalar

டேராடூன்: உத்தரகண்டில் ஆற்றில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளான அவர்கள், காரில் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்தனர். உத்தரகண்டின் டேலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார் சிக்கியது. அதில் 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேரது உடல்கள் காரில் சிக்கி உள்ளது. அதனை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.