சீன தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் ‘பெல்-505’ ரக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
சாங்பிங் மாவட்டத்திலிருந்து தலைநகரின் தெற்குப் பகுதிக்கு பறந்து கொண்டிருந்த பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான சிவிலியன் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் 2 விமானிகளும் சிக்கி உயிரிழந்த நிலையில், ஹெலிகாப்டரும் சேதமடைந்தது.