டோக்கியோவில் பிரச்சார உரையில் ஈடுபட்டு இருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல்நிலை கடுமையான நிலையில் இருப்பதாக தற்போதைய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மேற்கு ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் பிரச்சார உரையில் ஈடுபட்டு இருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுடப்பட்டார்.
அப்போது மேடையில் பேசி கொண்டிருந்த ஷின்சோ அபே சுருண்டு விழுந்ததை தொடர்ந்து, அவர் உடனடியாக விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Japan’s former Prime Minister Shinzo Abe is fighting for his life after being shot at during a campaign event. pic.twitter.com/6xbVCTV2NX
— DW News (@dwnews) July 8, 2022
இந்தநிலையில், பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர், ஃபுமியோ கிஷிடா, ஷின்சோ அபேவின் உடல்நிலை மிகவும் கடுமையான நிலையில் இருப்பதாகவும், ஆனால் அபே நிச்சியமாக உயிர் பிழைப்பார் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த தாக்குதலை கொடூரமானது மற்றும் காட்டிமிராண்டித்தனமானது என்றும், ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த குற்றம் முற்றிலும் மன்னிக்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
நாரா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஷின்சோ அபே மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் ஒருவரை ஜப்பான் போலிஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், அபே விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: முன்னாள் ஜப்பான் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
[UQ3ZFR
உள்ளூர் தீயணைப்பு துறை அதிகாரி Makoto Morimoto என்பவர், 67 வயதான அபே சுவாசிக்கவில்லை என்றும், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவரது இதயம் நின்று விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.