பங்கு சந்தைகளில் நீண்டகாலமாக முதலீடு செய்பவர்களுக்கு நிச்சயம் டிவிடெண்ட் பற்றி தெரிந்து இருக்கும். இது பங்குகள் கொடுக்கும் வருமானத்துடன் கிடைக்கும் கூடுதல் வருமானமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள், லாபம் ஈட்டு போது பங்குதாரர்களை ஊக்குவிக்கும் விதமாக, லாபத்தினை பகிர்ந்து அளிப்பார்கள். இதனை ஈவுத் தொகை அல்லது டிவிடெண்ட் என்பார்கள்.
படிக்கும்போதே 8 லட்சம் பரிசு… ஐஐடி டெல்லி மாணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்!
பொதுவாக சிறப்பானதொரு நிறுவனங்கள் வருடா வரும் இந்த ஈவுத் தொகையை வழங்குகின்றன.
கவனிக்க வேண்டிய பங்குகள்
பொதுவாக இவ்வாறு நிறுவனங்கள் டிவிடெண்ட் கொடுக்கும் காலக்கட்டத்தில் பங்கு விலையிலும் நல்ல ஏற்ற இறக்கம் இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
அந்த வகையில் கடந்த 2022ம் நிதியாண்டிற்கான டிவிடெண்டினை பல நிறுவனங்கள் கொடுக்கவுள்ளன. இதில் பிரஸ்மேன் அட்வர்டைசிங், ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸ், சுந்தரம் பைனான்ஸ், ஆன்வர்ட் டெக்னாலஜிஸ், டைட்டன் நிறுவனம், லூமாக்ஸ், இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களும் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.
ரெக்கார்டு டேட்
மேற்கண்ட நிறுவனங்கள் தங்களது ஈவுத் தொகையை அளிக்க ரெக்கார்டு டேட்டாக அறிவித்திருந்தன. ஆனால் சனி மற்றும் ஞாயிறுகளில் விடுமுறை என்பதால் சந்தை விடுமுறையாகும். ஆக பங்குகளுக்கான EX- dividend- க்கான தேதியானது ஜூலை 8, 2022 ஆக குறைந்துள்ளது.
பிரஸ்மேன்
பிரஸ்மேன் அட்வர்டைசிங் லிமிடெட் நிறுவனம் ஒரு பங்குக்கு 50 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இது மார்ச் 2022வுடன் முடிந்த ஆண்டிற்காக அறிவிப்பாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இப்பங்கின் விலையானது 42 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.
ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ்
ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ் நிறுவனமும் கடந்த மாதமே தகுதியான பங்குதாரர்களுக்கு, ஒரு பங்குக்கு 1.20 ரூபாய் (60%) டிவிடெண்டாக அறிவித்தது. இதன் முக மதிப்பு 2 ரூபாயாகும். இது கடந்த நிதியாண்டிற்காக வழங்கப்படவுள்ளது. இதன் பங்கு விலை இன்று கிட்டதட்ட 1% அதிகரித்து, 575.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
சுந்தரம் பைனான்ஸ்
சுந்தரம் பைனான்ஸ் நிறுவன பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிவிக்கையில், 2022ம் நிதியாண்டிற்காக டிவிடெண்டாக ஒரு பங்குக்கு இறுதி டிவிடெண்டாக 100% அல்லது 10 ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு இடைக்கால டிவிடெண்டாகவும் 10 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த, ஒரு பங்குக்கு 20 ரூபாய் டிவிடெண்ட் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜூலை 28 அன்று பங்குதாரர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பங்கின் விலை இன்று கிட்டதட்ட 1% அதிகரித்து, 1881.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஆன்வர்டு டெக்னாலஜி
ஆன்வர்டு டெக்னாலஜி நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு பங்குக்கு 30% அல்லது 3 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதன் முகமதிப்பு 10 ரூபாயாகும். இதுவும் ரெக்கார்டு டேட் 11 ஜூலையாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்பங்கின் விலை இன்று 1.56% அதிகரித்து, 286.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டைட்டன் நிறுவனம்
டைட்டன் நிறுவனம் ஒரு பங்குக்கு 7.50 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதுவும் ரெக்கார்டு டேட் 11 ஜூலையாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்பங்கின் விலை இன்று 0.79% அதிகரித்து, 2144.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
லூமக்ஸ் ஆட்டோ டெக்னாலஜி
லூமக்ஸ் ஆட்டோ டெக்னால்ஜி நிறுவனம் 175% அல்லது 3.5 ரூபாய் ஈக்விட்டி டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதன் முக மதிப்பு 1 ரூபாயாகும். இப்பங்கின் விலை இன்று 2.05% அதிகரித்து, 209.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது யாருக்கு கொடுக்கப்படலாம் என்ற இறுதி முடிவானது ஜூலை 11 அறிவிக்கப்படலாம்.
லூமக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
மார்ச் 2022வுடன் முடிவடைந்த ஆண்டில் லூமக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஒரு பங்குக்கு 13.5 ரூபாய் டிவிடெண்டினை அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த டிவிடெண்ட் வெளியீட்டுக்கு தகுதியானவர்கள் யார் என்று இறுதி முடிவானது ஜூலை 11 அறிவிக்கப்படலாம். இதற்கிடையில் இன்று இப்பங்கின் விலை இன்று 2.07% குறைந்து, 1363 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Do you own any of these 7 stocks? check details
Do you own any of these 7 stocks? check details/இந்த 7 பங்குகளில் ஏதேனும் வச்சிருக்கீங்களா.. விரைவில் சர்பிரைஸ் உண்டு?!