இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி நவீன் எண்டர்பிரைசஸ் நிறுவனர் பாஸ்கர் ராவ் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில் “விருது பெறும் நோக்குடன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை தனது அகிரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறி, என் நிறுவனத்திடம் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கினார். அதற்கான வாடகை பாக்கி 25 லட்சத்து 13 ஆயிரத்து 238 ரூபாயை செட்டில் செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை செலுத்தாமல் ஜூலை 15ஆம் தேதி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, மனு மீது நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம், அதன் இயக்குநரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12க்கு ஒத்திவைத்தார்.