ஈரானில் இருந்து படகுகளில் கடத்தப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டிஷ் கடற்படை வழிமறித்துப் பறிமுதல் செய்துள்ளது. ஈரானியக் கடற்கரைப் பகுதியில் பிரிட்டிஷ் கடற்படை ஹெலிகாப்டர் பறந்தபோது அதிவிரைவுப் படகுகள் சென்றதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளது.
படகுகளை பிரிட்டிஷ் போர்க்கப்பல் மூலம் வழிமறித்துச் சோதித்ததில் 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறனுள்ள 351 வகை ஏவுகணைகள், தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் 358 வகை ஏவுகணைகள் இருந்ததைக் கண்டதால் அவற்றைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ளது.
351 வகை ஏவுகணைகள் மூலம் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.