ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 600 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 27 கிலோ அளவிலான கெட்டுப்போன உணவுப்பொருட்கள், காலாவதியான மருந்துகள் மற்றும் 10 வீட்டு உபயோக சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன் விதிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.