ஜெனீவா: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77% அதிகரித்து உள்ளது என்றும், 59 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் உள்ள நிலையில் புதிய வரவான மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் உலக நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது. ஆப்ரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்த அம்மை நோய் தற்போது வரை 59 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்த தொற்று பரவால் இருப்பதற்கான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ‘குரங்கு அம்மை வைரஸ் அதிகரித்து வருவதும், பரவலும் கவலை அளிக்கிறது. கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59 நாடுகளில் 6,027 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மையால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்.கடந்த 27-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 85 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு, ஐரோப்பாவில பதிவாகி உள்ளது.’ என தெரிவித்தா