வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமல் நம்மால் இருக்க முடியாது. பழங்களின் ராஜாவாக இருக்கும் மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் குறிபிட்ட காலத்திற்கு மட்டுமே இது கிடைப்பதால், நாம் இதை அதிகமாக சாப்பிடுகிறோம். குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைப்பதால், மாம்பழங்களை நாம் அதிகமாக சாப்பிடலாமா என்ற கேள்வி நம்மக்கு வரலாம்.
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் யூரிக் ஆசிட் அளவு அதிகமாக இருந்தால், அதிக ட்ரைகிளிசரைட் அளவு இருந்தால், நீங்கள் நிச்சியம் அதிகமாக மாம்பழங்களை சாப்பிடக்கூடாது.
மாம்பழங்களில் அதிக இனிப்பு இருக்கிறது. இதனால் உங்கள் ரத்த சக்கரை அளவு அதிகமாகும். நமது நாட்டில் ஃபேட்டி லிவர் என்ற நோய் ஏற்படும். நாம் அதிகம் கார்போஹைட்ரேட் எடுத்துகொள்ளும்போது, இந்த நோய் உருவாகிறது.
மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால், ரத்த சக்கரை அதிகமாவதோடு, யூரிக் ஆசிட் அளவும் அதிகமாகி கல்லீரலை பாதிக்கிறது.