என் அருமை நண்பர் மீது துப்பாக்கிச்சூடு! ஜப்பான் முன்னாள் பிரதமர் குறித்து வேதனை தெரிவித்த நரேந்திர மோடி


ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

மர்ம நபர் சுட்டத்தில் படுகாயமடைந்த ஷின்ஸோ அபே , உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷின்ஸோ அபே பதிவிட்டுள்ளார்.

Shinzo Abe

அதில், ‘எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் எப்போதும் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.     

Narendra Modi

File Photo



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.