ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருள்கள் என கருதப்பட்ட ஏசி, வாஷிங் மெஷின் பிரிட்ஜ் ஆகியவை தற்போது அத்தியாவசிய பொருட்களாக மாறிவிட்டன.
நடுத்தர வர்க்கத்தினரிடம் கூட ஏசி, வாஷிங் மெஷின் பிரிட்ஜ் ஆகிய பொருள்கள் தற்போது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை வீழ்ச்சி அடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!
ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின்
ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய பொருட்கள் பட்டியலில் தற்போது ஏசி, வாசிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியவை இணைந்து விட்டது என்பதும் பெரும்பாலானோர் மேற்கண்ட பொருள்களை வீட்டில் வாங்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு
இந்த நிலையில் பணவீக்கம் உள்பட ஒரு சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலைகள் சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவற்றின் முக்கிய மூலப்பொருளான தாமிரம், எஃகு மற்றும் அலுமினியத்தின் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை குறையும்
ஆனால் தற்போது மூலப்பொருளான தாமிரம், எஃகு, அலுமினியம் ஆகியவற்றின் விலை குறைந்து வருவதால் இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை காலம்
ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின்கள் ஆகியவை பண்டிகை காலத்தில் வாங்குவது என்ற வழக்கம் நமது இந்திய மக்களிடம் இருந்து வருகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடித்தள்ளுபடி நேரத்தில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கும் வழக்கமாக இருந்து வருகிறது.
மூலப்பொருட்கள்
தாமிரம், எஃகு மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் விலை கடந்த மூன்று மாதங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியது. ஆனால் தற்போது இதன் விலைகள் குறைந்து வருவதை அடுத்து ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உற்பத்தியாளர்கள் பொருட்களின் விலையையும் குறைக்க முடிவு செய்துள்ளனர். பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், புளூஸ்டார், குரோம்ப்டன், ஹேவெல்ஸ், வோல்டாஸ் மற்றும் வேர்ல்பூல் போன்ற பொருட்களின் உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்
மேலும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தாமிரம் 20 சதவீதம் குறைந்துள்ளது என்றும், இரும்பு 19 சதவிகிதம், அலுமினியம் 36 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அறிவித்துள்ளது.
மலிவான விலை
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களின் மூலப்பொருட்கள்விலைகள் மிகவும் உயர்ந்ததால் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் 20 சதவீதம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விலையில் திருத்தம் செய்யப்பட்டு வருவதால் இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்கள் பொறுத்திருந்தால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சலுகைகள்
இந்தநிலையில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது விளம்பர முயற்சிகளை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. எனவே பண்டிகை காலம் இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விலை அதிகமாக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
AC, fridge and washing machines rates will get cheaper soon
AC, fridge and washing machines rates will get cheaper soon | ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!