ரஷ்யா உக்ரைன் பிரச்சனை ஆரம்பமானது முதல் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றது.
ரஷ்யாவுக்கு எதிராக அறிக்கையோடு மட்டும் நிறுத்தாமல், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் வரை உதவி செய்து வருகின்றது.
ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்க.. சாமானியர்களுக்கு ஏற்ற 3 புதிய பிளான்கள்..!
மேலும் உக்ரைனுக்கு மேற்கொண்டு பல உதவிகளையும் செய்து வருகின்றன. அதோடு நில்லாமல் உக்ரைன்னுக்கு ஆதரவாக ஒரு அணியையே திரட்டியும் உள்ளது.
அச்சம்
ஆரம்பத்தில் இந்தியாவுக்கும் கூட அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் இந்தியாவோ இதனை ஏற்கவில்லை, மாறாக ஆரம்பம் முதல் நடு நிலை வகித்து வந்தது. இன்று பல மாதங்கள் ஆகியும் போர் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. எனினும் இன்று வரையில் போர் எப்போது தான் முடிவுக்கு வருமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.
அமெரிக்காவுக்கு பலன் உண்டோ?
ஒரு புறம் இது பிரச்சனையால் உதவுவதாக இருந்தாலும், மறுபுறம் இதனால் அமெரிக்காவுக்கு மறைமுகமாக பலன் உண்டு எனலாம்.
உதாரணத்திற்கு கடந்த மாதம் மட்டும் அமெரிக்கா 5 மில்லியன் பேரல்களுக்கு மேலாக எண்ணெய்-யினை ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்துள்ளது. ஆதுவும் டீசல், பெட்ரோல் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டுள்ள நிலையில் இந்த ஏற்றுமதியானது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்த திட்டம்
ரஷ்யாவினை நிதி ரீதியாக தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் கேஸ் வாங்குவதை கூட தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன. சில நாடுகள் ஏற்கனவே இறக்குமதியினை ரஷ்யாவில் இருந்து நிறுத்தி விட்டன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் எரிபொருளை இறக்குமதி செய்வது ஐரோப்பிய நாடுகள் தான். ஆக ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியினை நிறுத்திவிட்டால், ரஷ்யா பின்னடைவை சந்திக்கலாம் என்றெல்லாம் மேற்கத்திய நாடுகள் கனவு கண்டன.
சலுகை விலையில் எண்ணெய்
ஆனால் மேற்கத்திய நாடுகளின் வியூகம் தவிடு பொடியானது எனலாம். ஏனெனில் ரஷ்யா முன்பை விட தள்ளுபடி விலையில் எண்ணெய் சப்ளை செய்வதாக நட்பு நாடுகளான இந்தியா, சீனாவுக்கு உள்ளிட்ட சில நாடுகளுக்கு சப்ளை செய்து வருகின்றது. ரஷ்யாவின் இந்த சலுகையானது இன்னும் சில நாடுகளையும் ஈர்க்க தொடங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா சப்ளை
ஆனால் ஐரோப்பா தடை செய்யப்போவதாக கூறியிருந்த நிலையில், ரஷ்யாவின் பங்கினை அமெரிக்க பங்குபோட ஆரம்பித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது.
இருப்பில் இருந்து சப்ளை
அக்டோபர் மாதம் வரை மூலோபாய பெட்ரோலியம் இருப்பில் (SPR) இருந்து சுமார் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் எஸ் பி ஆர் – இருப்பு கடந்த மாதம் 1986ல் இருந்து மிக குறைந்த அளவுக்கு சரிந்தது. இந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு, 100 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
மறைமுகமாக அமெரிக்காவுக்கு பலன்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க சுத்திகரிப்பாளர்களின் வருவாய் விகிதமும் கணிசமான உச்சத்தினை எட்டியுள்ளது. எரிபொருள் விலையை குறைக்க மூலோபாய இருப்பில் இருந்தும் அமெரிக்கா சப்ளை செய்து வருவதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த காலகட்டத்தில் விலையும் அதிகம். சப்ளையும் அதிகரிக்கும்போது, அது அமெரிக்க நிறுவனங்களும் மறைமுகமாக பயன்பெறுகின்றன.
மொத்தத்தில் உக்ரைன் ரஷ்யா பிரச்சனையில், அமெரிக்காவுக்கு மறைமுகமாக ஆதரவு கிடைத்து வருகின்றது எனலாம்.
America benefits indirectly from Ukraine Russia problem: US supply more oil to Europe
America benefits indirectly from Ukraine Russia problem: US supply more oil to Europe/ஒரு வேளை இப்படி இருக்குமோ.. அமெரிக்கா சப்போர்ட் செய்ய இது தான் காரணமோ.. ரஷ்யாவுக்கு சிக்கல் தான்!