காலகட்டத்திற்கு ஏற்ப தங்களையும் வசதி வாய்ப்பையும் மாற்றிக்கொள்ளும் மக்கள் மத்தியில், பெண்மணி ஒருவர் 104 ஆண்டுகளாக ஒரே குடியிருப்பில் வசித்து வருகிறார்.
பிரித்தானிய பெண்மணியான எல்சி ஆல்காக் தாம் பிறந்த வீட்டிலேயே இன்றளவும் குடியிருந்து வருகிறார்.
1918ல் பிறந்த அவர், இதுவரை 2 உலகப்போரையும், பிரித்தானிய மன்னர்கள் நால்வர், ராணியார், பிரதமர்கள் 25 பேர்கர் என பார்த்துள்ளார்.
குறித்த பெண்மணி ஹுத்வைட்டில் உள்ள பார்கர் தெருவில் ஒரு மாடி வீட்டில் வசித்து வருகிறார்.
அவரது தந்தை 1902 ம் ஆண்டில் ஏழு வெள்ளி மற்றும் ஆறு பென்ஸ், சுமார் 30 பவுண்டுக்கு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.
ஐந்து குழந்தைகளில் இளையவரான எல்சி 1941 ல் இரண்டாம் உலகப் போரின் போது திருமணம் செய்து கொண்டு தனது கணவர் பில் உடன் இந்த குடியிருப்பில் வசிக்கத் தொடங்கியுள்ளார்.
தாயார் இறந்த பின்னர் தமது தந்தையை கவனிக்கும் பொறுப்பு தமக்கு அமைந்ததால், தந்தை மற்றும் கணவருடன் இந்த வீட்டில் குடியிருக்க தொடங்கியதாக எல்சி தெரிவித்துள்ளார்.
1949ல் தந்தை மரணமடைய, இறுதியில் 1960ல் அந்த வீட்டையே சொந்தமாக வாங்கியதாக எல்சி தெரிவித்துள்ளார்.
வங்கியில் இருந்து கடன்வாங்கி சுமார் 250 பவுண்டுகளுக்கு அந்த வீட்டை எல்சி வாங்கியுள்ளார்.
தற்போது வீடு மற்றும் மற்றும் நிலத்தின் மதிப்பு மட்டும் 75,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது.
இந்த வீட்டை விட்டு வேறு எங்கும் சென்று வசிக்கும் நிலை ஏற்படவில்லை எனவும், இந்த வீடு தமக்கு எல்லாமுமாக அமைந்து போனது என்கிறார் எல்சி.
அவரது 75 வயது மகன் உட்பட அனைவரும் அதையே தற்போது கூறுகின்றனர். 104 வயது எல்சி இறுதி மூச்சுவரையில் இந்த வீட்டிலேயே குடியிருக்கவும் ஆசைப்படுகிறார்.