ஓடிடி தளங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆபத்து : தயாரிப்பாளர் எச்சரிக்கை
கொரோனா காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தாலும் அது விக்ரம், பீஸ்ட் மாதிரியான பெரிய படங்களாகத்தான் இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதி தியேட்டருக்கு வாராத சூழ்நிலை உள்ளது.
இதனை தயாரிப்பார் சி.வி.குமார் தனது முகநூல் பக்கத்தில் எச்சரித்திருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது: விக்ரம் படத்திற்கு பிறகு ஜூலை 1ம் தேதி வரை திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் எதுவும், அதன் அச்சு மற்றும் விளம்பர செலவுகளை கூட வசூலிக்கவில்லை என்று தெரிகிறது. திரையரங்குகளில் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு ஓடிடி தளங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதே காரணம். என்று பதிவிட்டுள்ளார்.
சி.வி.குமார் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர், மாயவன், கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியவர்.