சென்னை: ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு கட்சியின் நலனுக்கான வழக்கே இல்லை; தனிநபர் தேவைக்கான வழக்கு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு வாதிட்டு வருகிறது. பொதுக்குழுவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பிரச்னை பற்றி பொதுக்குழுவில் ஓபிஎஸ் விவாதிருக்க வேண்டும்; நீதிமன்றத்துக்கு வந்திக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.