கருக்கலைப்பு மையங்களுக்குச் செல்லும் பயனர்களின் லொகேஷன் தகவல்கள் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட உரிமையை ரத்து செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள பெண்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பதும் இந்த தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருபாய் அம்பானியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாபெரும் சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கதை
கருக்கலைப்பு
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பெண்கள் வேறு மாநிலங்களுக்கு அல்லது வேறு நாடுகளுக்கு சென்று கருக்கலைப்பு செய்ய விரும்பினால் அவர்களது பயண சேவை நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும் என பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
லொகேஷன் ஹிஸ்ட்ரி
இந்த நிலையில் கருக்கலைப்பு மையங்களுக்கு செல்லும் பயனர்களின் லொகேஷன் ஹிஸ்டரியை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கருக்கலைப்பு மையங்களுக்கு மட்டுமின்றி குடும்ப வன்முறை முகாம்கள், தனி உரிமை கோரப்படும் பிற இடங்களுக்கு செல்லும் பயனர்களின் லொகேஷன் ஹிஸ்டரி நீக்கப்படும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.
கூகுள் செய்திக்குறிப்பு
இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தனி உரிமைக்கு மதிப்பு அளிக்கும் நடவடிக்கை இது என்றும் வரும் வாரங்களில் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் கூகுள் தேடுபொறியில் யாரேனும் கருக்கலைப்பு கிளினிக் அல்லது வெயிட் லாஸ் கிளினிக், போதை மறுவாழ்வு மையம் ஆகியவற்றுக்கு சென்றிருந்தால் அந்த தகவலை நிரந்தரமாக ஹிஸ்ட்ரியில் இருந்து நீக்கி விடுவோம் என்றும் கூகுளின் மூத்த துணை தலைவர் ஜென் ஃபிட்ஸ்பேட்ரிக் தெரிவித்துள்ளார். அவர்கள் தெரிவித்துள்ளார்.
சில கேள்விகள்
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்திடம் ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு பயனர் கருக்கலைப்பு மையங்களுக்கு தான் செல்கிறார்கள் என்பதை எப்படி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்றும், கருக்கலைப்பு மையங்களுக்கு செல்வது குறித்த தகவல்கள் முழுமையாக அழிக்கப்படுமா? அல்லது இடைக்காலத்திற்கு மட்டும் அழிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தது. இந்த கேள்விகளுக்கு விரைவில் கூகுள் பதில் சொல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கை
ஏற்கனவே கருக்கலைப்பு தடை சட்டம் அமெரிக்காவில் அமலுக்கு வந்தவுடன் பல அரசியல் தலைவர்கள், மகளிர் நல உறுப்பினர்கள் கூகுள் தேடுபொறியில் கருக்கலைப்பு மையங்களுக்கு செல்லும் லொகேஷன் தகவலை நிரந்தரமாக நீக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து இது குறித்து ஆய்வு செய்த கூகுள் தற்போது லோகேஷன் ஹிஸ்ட்ரியை நீக்கும் முடிவை எடுத்துள்ளது.
சுந்தர் பிச்சைக்கு கடிதம்
அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே கூகுள் பயனாளர்கள் பலர் தாங்கள் கருக்கலைப்பு மையங்களுக்கு செல்லும் ஹிஸ்டரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர் என்பதும் இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு ஒரு சிலர் கடிதம் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கருக்கலைப்பு தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து கூகுள் நிறுவனம் கருக்கலைப்பு மையங்களுக்கு செல்லும் பயனாளிகளின் லோகேஷன் ஹிஸ்ட்ரி நீக்கப்படும் என்று அறிவித்துள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Google delete location history of users who visit abortion centers!
Google delete location history of users who visit abortion centers! | கருக்கலைப்பு கிளினிக் செல்பவர்களுக்கு பாதுகாப்பு: லொகேஷன் ஹிஸ்ட்ரியை நீக்கும் கூகுள்!