குஜராத்தை போல் லக்னோவிலும் 108 அடி உயர அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது.
அங்குள்ள கோமதி நதிக்கரையில் உள்ள தேவ்ரஹா காட் பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலில் இந்த சிலை நிறுவப்படுகிறது.
அனுமன் கோயிலில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் சிலை தயாராகிவிடும் என்று கட்டடக் கலைஞர்களில் ஒருவரும், கோயிலின் அறங்காவலருமான விஜய் சின்ஹா கூறினார். ஏற்கனவே அங்கு 151 அடி உயரத்தில் லட்சுமணன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.