பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கொசு கடித்ததால் உயிரிழந்ததைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள Suffolk என்ற இடத்தைச் சேர்ந்த Oriana Pepper (21) என்ற இளம்பெண், பெல்ஜியம் நாட்டில் விமானியாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொசு ஒன்று அவரது நெற்றியில் கடித்துள்ளது. கொசு கடித்த இடம் வீக்கமடையவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவர்கள் அவருக்கு ஆன்டிபயாடிக்குகள் கொடுத்து அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால், இரண்டு நாட்களுக்குப் பின் Oriana திடீரென மயங்கிவிழ, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார் அவரது காதலரான James Hall.
ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, மூன்று நாட்களுக்குப் பின் உயிரிழந்துவிட்டார் Oriana. நடந்தது என்னவென்றால், அந்த கொசு கடித்ததால் Orianaவுக்கு நெற்றியில் நோய்த்தொற்று உருவாகியிருக்கிறது.
அந்த தொற்றை உருவாக்கிய கிருமிகள் அப்படியே மூளைக்குப் பரவியதையடுத்து Oriana உயிரிழந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி, தன் வாழ்நாளில் தான் இப்படி ஒரு விடயத்தை கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.