மத்திய அரசு கடந்த மே 13ம் தேதி முதல் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கோதுமையை அடுத்து கோதுமை மாவு உட்பட ஒரு சில பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைகீழாக மாறிய பிரிட்டன் அரசு.. ரிஷி சுனக் உட்பட 5 அமைச்சர்கள் ராஜினாமா..!!
மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி கோதுமை மாவு உட்பட மேலும் சில பொருள்கள் இனி ஏற்றுமதி செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.
ஏற்றுமதி
இது குறித்து ஏற்றுமதி வர்த்தக இயக்குனராக ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்றும் ஜூலை 12-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு கோதுமை, கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் கூறியுள்ளது.
கோதுமை மாவு
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் கோதுமை மாவு ரகம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த தடை இல்லை
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த கோதுமை மாவுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் சில உப பொருள்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோதுமை மாவு ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் அமைச்சர்கள் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் மத்திய அரசு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு
கடந்த சில வாரங்களாக கோதுமை மாவு விலை உயர்ந்து வருவதை அடுத்தே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் கோதுமை உற்பத்தி குறையும் என்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விலை குறையுமா?
கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த பின்னர் உள்நாட்டில் கோதுமை விலை குறைய தொடங்கியது. அதேபோல் தற்போது கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோதுமை மாவு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுப்பாடு
கோதுமை ஏற்றுமதி தடை காரணமாக பலர் கோதுமை மாவை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்ததாகவும், அதன் காரணமாகத்தான் கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு கொண்டு வந்திருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதி முழுமையாக தடை விதிக்கப்படவில்லை என்றும் ஏற்றுமதியாகும் கோதுமையின் விவரங்கள் முழுவதும் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
After wheat, India now curbs the export of wheat flour!
After wheat, India now curbs the export of wheat flour! | கோதுமை மட்டுமல்ல, கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் தடை.. மத்திய அரசின் திடீர் முடிவு!