கௌதாரி பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய பொறியாளர்கள் 2 பேர் கைது.!

மாவட்டத்தில் கௌதாரி பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய கட்டிட பொறியாளர்கள் 2 பேரை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அரசன்குளம் காட்டுப்பகுதியில் இருவர் பறவைகளை வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவ்வழியாக வந்த காரை போலீசார் சோதனையிட்ட போது உள்ளே 2 துப்பாக்கிகளும், சுட்டுகொல்லப்பட்ட 7 கெளதாரிகளும் இருந்துள்ளன.

காரில் இருந்த கட்டிட பொறியாளர்கள் முருகன், அசோக் ஆகியோரை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் இருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.