சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைகிறதா? தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் மாதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட 50 ரூபாய் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலைஉயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை விரைவில் குறையும் வாய்ப்பு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.

புரோட்டா மாஸ்டர் சம்பளம் கூட ஒயிட்காலர் ஊழியர்களுக்கு இல்லை: 65% இந்தியர்களின் சம்பளம் இவ்வளவுதானா?

சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்துகொண்டே வருகிறது என்பதும் ஜூலை 5ஆம் தேதி வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது என்பதும் தெரிந்ததே.

போன வருட விலை

போன வருட விலை

ஒரு வருடத்திற்கு முன்பு அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.834.50 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.859.50 ஆகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பரில் ரூ.884.50 ஆகவும் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, டெல்லியில் எல்பிஜி விலை ரூ.15 உயர்த்தப்பட்டு 899.50 ஆக இருந்தது.

ஒரே வருடத்தில் ரூ.218.50 உயர்வு
 

ஒரே வருடத்தில் ரூ.218.50 உயர்வு

இந்த ஆண்டு மார்ச் வரை அதே விலையில் இருந்த நிலையில் திடீரென சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியதால் மே மாதம் மீண்டும் சிலிண்டர் விலை ரூ..50 உயர்ந்தது. அதைத் தொடர்ந்து சிலிண்டரின் விலை இருமுறை உயர்த்தப்பட்டு, டெல்லியில் சிலிண்டரின் விலை ரூ.1,003ஐ எட்டியது. எனவே, ஜூலை 2021 முதல் ஜூலை 2022 வரை, கச்சா எண்ணெய் விலை உயர்வால் சிலிண்டரின் விலை 218.50 ரூபாய் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சிலிண்டர் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சிலிண்டர் விலைகள் இறக்குமதி சம விலை (IPP) என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இந்தியா தனது பெரும்பாலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், ஐபிபி ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

சிலிண்டரின் விலையை கணக்கிடும் போது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், சரக்கு செலவுகள், எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள், சந்தைப்படுத்தல் செலவுகள், டீலர் கமிஷன்கள் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பிற உள்நாட்டு காரணங்களும் சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன.

விலை குறைய வாய்ப்பு

விலை குறைய வாய்ப்பு

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் ப்ரெண்ட் கச்சா விலைகள் சரிந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், சிலிண்டரின் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆய்வாளர்களின் கருத்து

ஆய்வாளர்களின் கருத்து

சிலிண்டரின் விலையில் கச்சா எண்ணெயின் தாக்கம் குறித்து மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வாளர் ஸ்வர்ணேந்து பூஷன் அவர்கள் கூறியபோது, ‘தற்போதைய ரஷ்யா-உக்ரைன் போர், அரசியல் நெருக்கடி ஆகியவை எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது. இதனால், இந்தியாவிலும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை உயர்வுக்கு ரூபாய் மதிப்பு சரிவு முக்கிய காரணம். எங்கள் சிலிண்டர் நுகர்வில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். எண்ணெய் விலை குறைந்தவுடன், சிலிண்டர் விலையும் குறையும் என எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

இரண்டு காரணங்கள்

இரண்டு காரணங்கள்

பிஎஸ்எல் அட்வகேட்ஸ் & சொலிசிட்டர்ஸின் அசோசியேட் பார்ட்னர் சுவிக்யா அவஸ்தி அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘சிலிண்டர் விலையை உயர்த்தும் போக்கு நேரடியாக இரண்டு முக்கியமான காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று பெட்ரோலிய எரிவாயுவின் சர்வதேச விலைகள், இரண்டாவது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் பலவீனமடைந்துள்ளது’ என்று கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் போர்

ABA சட்ட அலுவலகத்தின் முதல்வரும் நிறுவனருமான அனுஷ்கா அரோரா அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘ சமீபத்திய சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். சிலிண்டர் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கச்சா விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர், ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LPG Cylinder Price to decline Soon? Know some real facts!

LPG Cylinder Price to decline Soon? Know some real facts! | சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைகிறதா? தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

Story first published: Friday, July 8, 2022, 10:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.