தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் கடந்த 4 அமர்வுகளாகவே தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது. இதனால் உணர்வுபூர்வமாக இன்னும் சரியலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்ந்து டாலரின் மதிப்பு, பத்திர சந்தையானது ஏற்றம் காணாவிட்டாலும் வலுவாகவே இருந்து வருகின்றது.
இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. எனினும் தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைகிறதா? தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!
முக்கிய லெவலுக்கு கீழ் வர்த்தகம்
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1740 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியானது கட்டாயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
குறையலாமோ?
எதிர்பார்ப்பினை போல மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை கூட்டினால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே பெரியளவில் மாற்றமின்றி தான் தங்கம் விலை காணப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் பாதியாவது ஏற்றம் காணுமா? தற்போது தங்கம் விலையானது உணர்வுபூர்வமாக குறையலாம் என்ற நிலை உள்ளது. இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகிறது.
இப்படியும் நடக்கலாம்
சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகின்றது. இதனால் அதிக ஏற்றம் தடுக்கப்படலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்க வட்டி விகிதம் அதிகரிக்காவிட்டால் என்னவாகும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
நிபுணர்களின் கருத்து என்ன?
நிபுணர்கள் சர்வதேச மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? இல்லையா என்பதே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதோடு பணவீக்கமானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
பணவீக்கம் Vs தங்கம்
ஒரு ஆண்டில் பணவீக்கம் 3% அதிகமாக இருந்த நிலையில், தங்கம் விலையானது சராசரியாக 14% ஆக அதிகரித்துள்ளது. ஆக தங்கம் விலையானது தற்போது வரையில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க விகிதம் சராசரியாக 5% மேலாக , தற்போது 8% என்ற லெவலில் காணப்படுகிறது. இதே தங்கத்தின் சராசரி 25% மேலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம்?
தங்கம் விலையியானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1739.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் 0.42% குறைந்து, 19.108 டாலராக காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 4676 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 37,408 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து, 5101 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 40,808 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,010 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 10 பைசா அதிகரித்து, 62.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 625 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 62,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,760
மும்பை – ரூ.46,850
டெல்லி – ரூ.46,850
பெங்களூர் – 46,880
கோயமுத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,850
Gold prices are marginally lower in the international market: What is the situation in the Indian market?
Gold prices are marginally lower in the international market: What is the situation in the Indian market?/தங்கம் விலை இன்றும் குறையுமா.. தொடர்ந்து முக்கிய லெவலுக்கு கீழாக வர்த்தகம்..!