சீனாவுக்கு ஆப்பு.. 100 கோடி மக்கள் பீதி.. உலகிலேயே மிகப்பெரிய சைபர் அட்டாக்..!

உலகம் முழுவதும் சைபர் தாக்குதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் செக்யூரிட்டியில் கிங் எனப் பெருமை பேசும் சீனாவில் ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

அதிலும் குறிப்பாக வரலாற்றிலேயே மிகப்பெரிய தகவல் திருட்டை சீனா எதிர்கொண்டு உள்ளது மட்டும் அல்லாமல், சீனர்களின் தகவல்களைக் கள்ள சந்தையில் வாங்குவதற்காகப் பெரும் போட்டி நிலவுகிறது என்றும் பேச்சு அடிப்படுகிறது.

அனைத்திற்கும் மேலாக ஹேக்கர்கள் கை வைத்த இடம் தான் வேற லெவல்..

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

சீனா - ஷாங்காய்

சீனா – ஷாங்காய்

சீனாவின் முக்கிய வர்த்தக நகரம் மற்றும் நிதியியல் சந்தையில் ஹப் ஆக விளங்கும் ஷாங்காய் நகரத்தின் போலீஸ் டேட்டா பேஸ்-ல் ஹேக்கர்கள் வைத்துள்ளனர். தற்போது வெளியான தகவல்கள் அடிப்படையில் பெயர் தெரியாத ஹேக்கர்கள் குழு ஷாங்காய் போலீஸ் டேட்டாபேஸ்-ல் இருந்து சுமார் 100 கோடி சீனர்களின் முக்கியமான தரவுகளைத் திருடியுள்ளனர்.

மிகப்பெரிய தகவல் திருட்டு

மிகப்பெரிய தகவல் திருட்டு

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தகவல் திருட்டாக இது பார்க்கப்படுகிறது. இதேவேளையில் ஹேக்கர்களின் தளமான ப்ரீச் போரம்-ல் கடந்த வாரம் ChinaDan என்ற பெயர் கொண்ட ஒருவர் 23 டெராபைட் அளவிலான சீன மக்களின் பர்சனல் டேட்டா-வை 10 பிட்காயின்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

10 பிட்காயின்
 

10 பிட்காயின்

10 பிட்காயின் என்றால் கிட்டதட்ட 2,00,000 பிட்காயின் இந்திய ரூபாய் மதிப்பில் இது 1.58 கோடி ரூபாய், ஆனால் இது பிட்காயின் என்பதால் விலை அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

ChinaDan அதிரடி

ChinaDan அதிரடி

ChinaDan போட்ட பதிவில் ஷாங்காய் நேஷ்னல் போலீஸ் டேட்டாபேஸ் லீக் ஆகியுள்ளது, இதில் 100 கோடிக்கும் அதிகமாகச் சீன மக்களின் பர்சனல் தரவுகள் பல டெராபைட் அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளது.

திருடப்பட்ட தகவல்கள்

திருடப்பட்ட தகவல்கள்

ஹேக் செய்யப்பட்ட தரவுகளில் சீனர்களின் பெயர், முகவரி, பிறந்த இடம், நேஷ்னஸல் ஐடி நம்பர் (நம்ம ஊர் ஆதார் போல), மொபைல் எண், அவர்கள் செய்த குற்றம் மற்றும் வழக்கு விபரங்கள் ஆகியவை உள்ளது.

வெய்போ, வீசாட்

வெய்போ, வீசாட்

ChinaDan பதிவை உறுதி செய்யமுடியாத நிலை சீன சமுகவலைதளமான வெய்போ, வீசாட் போன்ற தளத்தில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது, இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பல கோடி மக்களின் தரவுகள் பொதுச் சந்தையில் இருக்கும்.

ChinaDan வைரல்

ChinaDan வைரல்

உதாரணமாக டிராபிக் சிக்னல் மீறியவர்களின் தரவுகள் கூட இதில் இருக்க அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என்பதால் சீன மக்கள் தற்போது பீதியில் உள்ளனர். இந்த ஹேக்கிங் மூலம் ChinaDan என்ற பெயர் தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. குறிப்பாக ஹேக்கர்கள் மத்தியில் ஹீரோவாகச் சித்தரிக்கப்படுகிறார்.

ஷாங்காய் நேஷ்னல் போலீஸ்

ஷாங்காய் நேஷ்னல் போலீஸ்

ஷாங்காய் மக்கள் தொகை 28,517,000 ஆனால் திருடப்பட்டது 100 கோடி தரவுகள், இதனால் ஷாங்காய் சுற்றியுள்ள பகுதி, இதுவரை ஷாங்காயில் வந்தவர்கள் எனப் பலதரப்பு மக்களின் தரவும் ஷாங்காய் நேஷ்னல் போலீஸ் டேட்டாபேஸ் லீக் திருடப்பட்டு இருக்கலாம்.

சீன அரசு உத்தரவு

சீன அரசு உத்தரவு

இதைத் தொடர்ந்து வெய்போவில் சீன அரசு உத்தரவின் படி Data Leak ஹேஷ் டேக்-ஐ தடை செய்து மக்களின் விவாதங்களுக்குத் தடை விதித்து அரசு கட்டுப்படுத்தியுள்ளது, ஆனால் தற்போது உலகமே பேசி வருகிறது.

காரணம்

காரணம்

ஹேக் செய்யப்படும் முன்னர் வரையில் ஷாங்காய் நேஷ்னல் போலீஸ் டேட்டாபேஸ் யார் வேண்டுமானாலும் பயன்படுத்த கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. தனிநபர் தகவல்கள் என்றால் அதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும், ஆனால் ஷாங்காய் நேஷ்னல் போலீஸ் டேட்டாபேஸ்-ல் பேக்டோர் வெப் அட்ரஸ் உள்ளது அதைப் பயன்படுத்தி 100 கோடி மக்களின் பர்சனல் டேட்டா திருடப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

1 billion Chinese citizens personal data hacked by ChinaDan; biggest ever database leak in history

1 billion Chinese citizens personal data hacked by ChinaDan; biggest ever database leak in history ChinaDan: 100 கோடி சீன மக்களின் தகவல் திருட்டு.. போலீஸ்-யிடமே ஹேக்கர்கள் கைவரிசை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.