சுத்தி சுத்தி அடிவாங்கும் சித்ரா ராமகிருஷ்ணா.. புதிய வழக்கு.. NSE ஊழியர்களுக்கு துரோகம்..!

சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன், சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.

பங்கு சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழும அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

ஏற்கனவே பல்வேறு மோசடிகளும், பிரச்சனைகளில் சிக்கியுள்ள சித்ரா ராமகிருஷ்ணனுக்கு, மேற்கொண்டு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது.

100 பேர் திடீர் பணிநீக்கம்.. டிவிட்டர் ஊழியர்கள் கதறல்.. எலான் மஸ்க் செய்த வினையா..?

ஊழலுக்கு பேர் போன சித்ரா ராமகிருஷ்ணன்

ஊழலுக்கு பேர் போன சித்ரா ராமகிருஷ்ணன்

என் எஸ் இ-யில் நடந்த ஊழலுக்கு பேர்போன சித்ரா ராமகிருஷ்ணன், இமயமலை சாமியாருடன் கலந்து ஆலோசித்ததோடு மட்டும் அல்ல, பங்கு சந்தை பற்றிய ரகசிய விவரங்களையும் அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இதனால் இவரின் மீது வழக்கு பதிவு செய்து , கைது செய்யப்பட்டுள்ளார்.. தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

அதிக லாபம் ஈட்ட உதவி

அதிக லாபம் ஈட்ட உதவி

என் எஸ் இ சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களை பகிர்ந்தது மட்டும் அல்ல, சில புரோக்கர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அதிக லாபம் ஈட்ட உதவியதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சித்ரா ராமகிருஷ்ணன், மத்தளம் போல சுற்றி சுற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மீண்டும் ஒரு எஃப்ஐஆர்
 

மீண்டும் ஒரு எஃப்ஐஆர்

இதற்கிடையில் தற்போது சித்ரா ராமகிருஷ்ணன், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நரேன். மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீதும் சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன குற்றச்சாட்டு?

என்ன குற்றச்சாட்டு?

சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன், சஞ்சய் பாண்டே ஆகியோர் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டுகேட்பு விவகாரமானது 2009 – 2017 வரையில் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய விவரங்கள் பகிர்வு

முக்கிய விவரங்கள் பகிர்வு

ஏற்கனவே கோ லொகேஷன் வழக்கில் அபாரதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இந்த வழக்கும் சேர்ந்துள்ளது.

பங்கு சந்தை வர்த்தகத்தினை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டமான இந்த கோப லொகேஷனில், பல முறைகோடுகளை செது, சியல் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு முன்னதாக பங்கு சந்தை தொடர்பான விவரங்களை பகிர்ந்ததாக என் எஸ் இ மீது குற்றாச்சாட்டு எழுந்தது.

அபராதம்

அபராதம்

 

இது குறித்து 18 பேருக்கு அபராதமும் விதித்துள்ளது. குறிப்பாக சித்ரா ராம கிருஷ்ணனுக்கு 7 கோடி ரூபாயும், ரவி நாரயணனுக்கு 5 கோடி ரூபாயும், ஆனந்த் சுப்ரமணியனுக்கு 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவர்கள் தவிர வே2வெல்த், ஜிகேஎன், சம்பார்க் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் 6 கோடி, 5 கோடி, 2 கோடி ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NSE SCAM: NSE phone tapping case against ex-leaders of NSE, ex-commissioner of police department of Mumbai

NSE SCAM: NSE phone tapping case against ex-leaders of NSE, ex-commissioner of police department of Mumbai/சுத்தி சுத்தி அடிவாங்கும் சித்ரா ராமகிருஷ்ணா.. புதிய வழக்கு.. NSE ஊழியர்களுக்கு துரோகம்..!

Story first published: Friday, July 8, 2022, 13:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.