செல்போன் இறக்குமதி 33% சரிவு! சீனாவை நம்பியிருக்கும் நிலை குறைந்துள்ளது! காரணம் என்ன?

செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் மொபைல் போன்கள் இறக்குமதி 33 விழுக்காடு சரிந்துள்ளதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்னணு சாதங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் செல்போன்கள் உற்பத்தி உள்நாட்டில் அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.
Canada province to ban mobile phones in public classrooms - BBC News
இதனால், 2021-22ஆம் நிதியாண்டில் உள்நாட்டில் செல்போன்கள் உற்பத்தி 26 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம், செல்போன்கள் இறக்குமதி 33 விழுக்காடு குறைந்துள்ளது. செல்போன்கள் இறக்குமதிக்கு சீனாவை சார்ந்திருக்கும் நிலை 2021ஆம் ஆண்டில் 64 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 60 சதவிகிதமாக குறைந்துள்ளதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.