ஜப்பான் முன்னாள் பிரதமர் மேடையில் சுடப்பட்ட தருணம்., இணையத்தில் பரவும் வீடியோ


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அபே மேடையில் சுடப்பட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

67 வயதான அபே, மேடையில், நாராவிடம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது , ​​அவர் மார்பில் சுடப்பட்டார். அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னாள் பிரதம மந்திரி அபே காலை 11:30 மணியளவில் நாராவில் சுடப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய டெட்சுயா யமகாமி (41) என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் மேடையில் சுடப்பட்ட தருணம்., இணையத்தில் பரவும் வீடியோ | Japan Ex Pm Shinzo Abe Collapsed Shooting Video

அபேயின் உரையின் போது தொடர்ச்சியாக இரண்டு சத்தம் கேட்டதாக பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK-ன் செய்தியாளர் கூறினார்.

ஷின்சோ அபே சிகிச்சைக்காக நாரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மதியம் 12:20 மணிக்கு அழைத்து செல்லப்பட்டார். துப்பாக்கி குண்டு அவரது இதயத்தில் நேரடடியாக பயந்து துளையிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு இருதய இயக்கம் மீட்பு சிகிச்சை, மற்றும் சுவாச மீட்பு சிகிச்சைகள் போன்றவை உடனடியாக வழங்கப்பட்டது.

இருப்பினும் ஷின்சோ அபே மாலை 5:03 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவமனையின் பேராசிரியர் ஹிடெடாடா ஃபுகுஷிமா தெரிவித்தார்.

அபேயின் கழுத்தின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டு இருப்பதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, 2006-ல் ஒரு வருடமும், 2012 முதல் 2020 வரையிலும் பதவியில் இருந்தார், அப்போது அவர் பலவீனமான குடல் அல்சரேட்டிவ் கோலிடிஸ் காரணமாக பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.